இதெல்லாம் படிச்சிட்டீங்களா?

நண்பர்களே!

சிந்தாநதி உங்களை வரவேற்கிறது.

படைப்புகளை வாசித்து
உங்கள் விமர்சனங்களால்
ஊக்கப் படுத்துங்கள்.

குறைகளுக்கு குட்டுங்கள்.

நிறைகளையும் சுட்டுங்கள்.

உங்கள் வருகையைப் பதிவு செய்ய மறக்காதீர்கள்.

நன்றி

சிந்தாநதி பாயும் பசுமைபூமிக்கு

Click Here

உள்ளே->>

சிவாஜியின் கதை-1

ஷாகாஜி போன்ஸ்லேக்கும் ஜீஜாபாய்க்கும் மகனாக 1630 பிப்ரவரி 19 ம் நாள் புனே அருகிலுள்ள ஷிவ்னேரி கோட்டையில் பிறந்தார். இவருக்கு சிவா என்று பெயரிட்டனர். எதிரிகளால் கைப்பற்றப் பட்ட தங்கள் நாட்டின் விடுதலையே லட்சியமாக வளர்ந்தார் சிவாஜி. தன் பதினாறாம் வயதில் பீஜப்பூர் சுல்தானுக்கெதிராக கிளர்ச்சி செய்து டோர்னா கோட்டையை கைப்பற்றினார். தொடர்ந்து கோண்டானா மற்றும் ராஜ்கட் கோட்டைகளும் சிவாஜியின் கைக்கு வந்தன.

அடுத்து முகலாயர்களுக்கெதிரான போரைத் துவக்கினார் சிவாஜி. தன் சகோதரர் சாம்பாஜியைக் கொன்ற அப்சல்கான் என்ற தளபதியை பிரதாப்கர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கொன்றார். இதன் மூலம் மராட்டிய மக்களின் ஆராதனைக்குரிய தலைவரானார். பின்னர் கோலாப்பூர் அருகே பீஜப்பூரின் மாபெரும் படையை குறைந்த வீரர்களைக்கொண்டு சிதறடித்தார்.

பின்பு சிவாஜி முகலாயப்படைகளை பலமுறை கொரில்லா போர்முறையால் தாக்கி அழித்தார். இதனால் கோபம் கொண்ட முகலாய மன்னர் ஔரங்கசீப் ஆம்பர் நாட்டின் ராஜா ஜெய்சிங் தலைமையில் ஒரு பெரும்படையை சிவாஜியை எதிர்ப்பதற்கு அனுப்பினார்.

இப்போரில் சிவாஜியின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. இதனால் முகலாயப்பேரரசுக்கு அடங்கிய சிற்றரசாக இருக்க ஒப்புக் கொண்டார்.

எனினும் சிவாஜியின் பேரில் சந்தேகம் கொண்ட ஓரங்கசீப் அவரை தன் தலைநகருக்கு அழைத்து சபையில் அவமரியாதை செய்தார். சிவாஜி ஆத்திரம் கொள்ளவே அவரைக் கைது செய்து கன்வர் ராஜா ராம்சிங்கின் பாதுகாப்பில் வீட்டுக் காவலில் வைத்தார். அங்கிருந்து தந்திரமாகத் தப்பிய சிவாஜி மூன்றாண்டுகள் கழித்து பெரும்படை சேர்த்துக்கொண்டு மீண்டும் முகலாயப் படைகள் மீது போர் தடுத்தார்.

இம்முறை தான் இழந்த பல இடங்களைக் கைப்பற்றிய சிவாஜி கோண்டானா கோட்டையை மீண்டும் கொரில்லா போர்முறையால் மீண்டெடுத்தார். இவ்வாறு தன் சாம்ராச்சியத்தை உருவாக்கிய சிவாஜி 1674 ல் சத்ரபதி சிவாஜியாக முடி சூடிக்கொண்டார். தொடர்ந்து தன் சாம்ராச்சியத்தை விரிவு படுத்திய சிவாஜி தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மற்றும் செஞ்சிக்கோட்டையை கைப்பற்றினார். கோல்கொண்டா சுல்தானுடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டார்.

1680ம் ஆண்டு சிவாஜி நோய்வாய்ப் பட்டு இறக்கும் வரை அவரது சாம்ராச்சியம் தொடர்ந்து விரிவு படுத்தப்பட்டு வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் சாம்ராச்சியத்தின் பாதுகாப்பிற்காக சுமார் 300 கோட்டைகளை உருவாக்கியதும் சத்ரபதி சிவாஜியின் சாதனைகளே.

இதுவே சத்ரபதி வீரசிவாஜியின் கதை!

சிவாஜியின் கதை-2

நன்றி: தமிழ்விக்கி

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக அக்டோபர் 1, 1927 ல் சீர்காழி அருகே சூரக்கோட்டையில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி. விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர்.

இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளைய் மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஜூலை 21, 2001 ல் காலமானார்

விருதுகளும் கௌரவங்களும்

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

நடித்த திரைப்படங்கள்

படையப்பா (1999) .... படையப்பாவின் தந்தை வேடம்
மன்னவரு சின்னவரு (1999)
பூப்பறிக்க வருகிறோம் (1999)
என் ஆசை ராசாவே (1998)
ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
கோபுர தீபம் (1997)
ஒன்ஸ் மோர் (1997)
பசும்பொன் (1995)
எங்கிருந்தோ வந்தான் (1995)
பாரம்பரியம் (1993)
சின்ன மருமகள் (1992)
நாங்கள் (1992)
முதல் குரல் (1992)
க்னோக் அவுட் (1992)
தேவர் மகன் (1992) .... பெரிய தேவராக
ஞானப் பறவை (1991)
காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
புதிய வானம் (1988)
என் தமிழ் என் மக்கள் (1988)
அன்புள்ள அப்பா (1987)
வீரபாண்டியன் (1987)
தாம்பத்தியம் (1987)
கிருஷ்ணன் வந்தான் (1987)
குடும்பம் ஒரு கோயில் (1987)
முத்துக்கள் மூன்று (1987)
ராஜ மரியாதை (1987)
ஜல்லிக்கட்டு (1987)
விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
சாதனை (1986)
மண்ணுக்குள் வைரம் (1986)
லக்ஸ்மி வந்தாச்சு (1986)
ஆனந்தக் கண்ணீர் (1986)
விடுதலை (1986)
மருமகள் (1986)
முதல் மரியாதை(1985) .... மலைச்சாமி வேடம்
படிக்காதவன் (1985)
ராஜ ரிஷி (1985)
பந்தம் (1985)
நீதியின் நிழல் (1985)
படிக்காத பண்ணையார் (1985)
நாம் இருவர் (1985)
நேர்மை (1985)
இரு மேதைகள் (1984)
வாழ்க்கை (1984)
வம்ச விளக்கு (1984)
சரித்திர நாயகன் (1984)
சிரஞ்சீவி (1984)
எழுதாத சட்டங்கள் (1984)
தராசு (1984)
திருப்பம் (1984)
சிம்ம சொப்பனம் (1984)
தாவனிக் கனவுகள் (1983)
உருவங்கள் மாறலாம் (1983)
சுமங்கலி (1983)
சந்திப்பு (1983)
உண்மைகள் (1983)
மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
நீதிபதி (1983)
வெள்ளை ரோஜா (1983)
காஷ்மிர் காதலி (1983)
வசந்தத்தில் ஒரு நாள் (1982)
வா கண்ணா வா (1982)
தியாகி (1982)
துணை (1982)
தீர்ப்பு (1982)
சங்கிலி (1982)
பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
ஊரும் உறவும் (1982)
ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
நெஞ்சங்கள் (1982)
ஹிட்லர் உமாநாத் (1982)
கருடா சௌக்கியமா (1982)
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
கீழ்வானம் சிவக்கும் (1981)
கல்தூன் (1981)
அமரகாவியம் (1981)
சத்ய சுந்தரம் (1981)
ரிஷி மூலம் (1980)
இரத்த பாசம் (1980)
விஷ்வரூபம் (1980)
எமனுக்கு எமன் (1980)
தர்ம ராஜா (1980)
மோகனப் புன்னகை (1980)
மாடி வீட்டு ஏழை (1980)
நான் வாழ வைப்பேன் (1979) .... ரவி வேடம்
வெற்றிக்கு ஒருவன் (1979)
திரிசூலம் (1979)
பட்டாகத்தி பைரவன் (1979)
நல்லதொரு குடும்பம் (1979)
நான் வாழவைப்பேன் (1979)
கவரி மான் (1979)
இமயம் (1979)
வாழ்க்கை அலைகள் (1978)
என்னைப் போல் ஒருவன் (1978)
ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
பைலட் பிரேம்நாத் (1978)
தியாகம் (1978)
புண்ணிய பூமி (1978)
அந்தமான் காதலி (1977)
சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
அண்ணன் ஒரு கோயில் (1977)
தீபம் (1977)
இளைய தலைமுறை (1977)
நாம் பிறந்த மண் (1977)
அவன் ஒரு சரித்திரம் (1976)
உத்தமன் (1976)
உனக்காக நான் (1976)
சத்தியம் (1976)
ரோஜாவின் ராஜா (1976)
கிரகப் பிரவேசம் (1976)
டாக்டர் சிவா (1975) .... டாக்டர் சிவா வேடம்
அன்பே ஆருயிரே (1975)
அவன் தான் மனிதன் (1975)
தங்கப்பதக்கம் (1974)
அன்பைத்தேடி (1974)
என் மகன் (1974)
தீர்க்க சுமங்கலி (1974)
பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
கௌரவம் (1973)
ராஜபாட் ரங்கதுரை
இராஜராஜசோழன் 1973)
பாரத விலாஸ் 1973)
பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
ஞான ஒளி (1972) .... அந்தொனி வேடம்
வசந்த மாளிகை (1972)
நீதி (1972)
சவாலே சமாளி (1971)
மூன்று தெய்வங்கள் (1971)
சுமதி என் சுந்தரி (1971)
பாபு (1971)
குலமா குணமா (1971)
தங்கைக்காக (1971)
இரு துருவம் (1971)
வியட்னாம் வீடு (1970) .... பத்மநாப ஜயர் வேடம்
விளையாட்டுப் பிள்ளை (1970)
எங்கள் தங்கம் (1970)
எங்க மாமா (1970)
பாதுகாப்பு (1970)
காவல் தெய்வம் (1969)
தெய்வ மகன் (1969)
சிவந்த மண் (1969)
தங்கச் சுரங்கம் (1969)
குருதட்சனை (1969)
தில்லானா மோகனாம்பாள் (1968) .... சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்
உயர்ந்த மனிதன் (1968)
கௌரி (1968)
எங்க ஊரு ராஜா (1968)
திருமால் பெருமை (1968)
கலாட்டா கல்யாணம் (1968)
என் தம்பி (1968)
இரு மலர்கள் (1967)
கந்தன் கருணை (1967) .... வீரபாகு வேடம்
தங்கை (1967) .... மதன் வேடம்
திருவருட்செல்வர்(1967)
மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) .... சுந்தரம் பிள்ளை
மகாகவி காளிதாஸ் (1966)
செல்வம் (1966)
திருவிளையாடல் (1965) .... சிவனின் அவதாரங்களாக
சாந்தி (1965)
பழனி (1965)
அன்புக்கரங்கள் (1965)
புதிய பறவை (1964)
கை கொடுத்த தெய்வம் (1964)
நவராத்திரி (1964)
ராமதாசு (தெலுங்கு) (1964)
பச்சை விளக்கு (1964)
இருவர் உள்ளம் (1963) .... செல்வம் வேடம்
கர்ணன் (1963) .... கர்ணன் வேடம்
பார் மகளே பார் (1963)
ரத்த திலகம் (1963) .... குமார் வேடம்
அறிவாளி (1963)
குலமகள் ராதை (1963)
குங்குமம் (1963)
அன்னை இல்லம் (1963)
பலே பாண்டியா (1962)
பார்த்தால் பசி தீரும் (1962)
பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
ஆலயமணி (1962)
நிச்சய தாம்பூலம் (1962)
படித்தால் மட்டும் போதுமா (1962)
வடிவுக்கு வளைகாப்பு (1962)
கப்பலோட்டிய தமிழன் (1961) .... வ.உ சிதம்பரம்பிள்ளை வேடம்
பாலும் பழமும் (1961)
பாப்பா பரிகாரம் (1961)
பாசமலர் (1961) .... ராஜசேகரன் வேடம்
பாவமன்னிப்பு (1961) .... ரஹிம் வேடம்
புனர் ஜென்மம் - (1961)
படிக்காத மேதை (1960)
பாவை விளக்கு (1960)
இரும்புத்திரை (1960)
தெய்வப் பிறவி (1960)
பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
மரகதம் (1959) .... வரேந்திரன்
வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) .... கட்டப்பொம்மன் வேடம்
பாகப்பிரிவினை (1959)
தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)
தங்கப்பதக்கம் (1959)
சபாஷ் மீனா (1958)
ஸ்கூல் மாஸ்டர் (1958)
சாரங்கதார (1958)
உத்தமபுத்திரன் (1958)
காத்தவராயன் (1958)
அம்பிகாபதி (1957) .... அம்பிகாபதி வேடம்
மக்களை பெற்ற மகராசி (1957) .... செங்கோடையன்
தங்கமலை இரகசியம் (1957)
வணங்காமுடி (1957)
தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
புதையல் (1957)
பாக்யவதி (1957)
அமரதீபம் (1956) .... அசோல்
பெண்ணின் பெருமை(1956)
ரங்கூன் ராதா (1956) .... தர்மலிங்க முதலியார் வேடம்
தெனாலி இராமன் (1956) .... தெனாலி இராமக்கிருஷ்ணா
கள்வனின் காதலி (1955) .... முத்தையன்
மங்கையர் திலகம் (1955) .... வாசு வேடம்
முதல் தேதி (1955) .... சிவஞானம்
கூண்டுக்கிளி (1954)
அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன் வேடம்)
எதிர்பாராதது (1954) .... சுந்தர் வேடம்
மனோகரா (1954) .... மனோகரா வேடம்
அன்பு (1954)
பூங்கோதை (1954)
பர்தேசி (1953) .... ஆனந்த் வேடம்
பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
பராசக்தி (1952) .... குணசேகரன் வேடம்

இதுவே நடிகர் திலகம் சிவாஜியின் கதை

சிவாஜியின் கதை-3

நன்றி : தமிழ்விக்கி

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த், 12 டிசம்பர் 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோஜி ராவ் கெய்க்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமய புனிதரான ராகவேந்திரரின் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவநத்த பாபா வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஹாசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில் ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.

ஆன்மீக ஈடுபாடு

ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி ஆவார். சிறு வயது முதல் ராகவேந்திரர், ராமகிருஷ்ணர் போன்றோரின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் அடிக்கடி இமய மலையில் உள்ள ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் தொடர்பு

1990களில் ரஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த் எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார்.

நான் எப்போ வருவேன்... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது...எப்போ வரணுமோ அப்போ கரெக்டா வருவேன். என்ற வசனத்தை நம்பி இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்

குடும்பம்

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். அவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்கள். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, 2004 ஆம் ஆண்டு இளம் தமிழ் திரைப்பட நடிகரான தனுஷை மணந்தார். இளைய மகள் சௌந்தர்யா திரைப்பட அனிமேஷன் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

இதுவே ரஜினிகாந்த் என்னும் சிவாஜி(ராவ்)யின் கதை.